பட்டதாரி இளம்பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு


பட்டதாரி இளம்பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மணவாளக்குறிச்சி அருகே பட்டதாரி இளம்பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே பட்டதாரி இளம்பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சமய வகுப்பு ஆசிரியை

நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை கோயிலடி தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம். இவருடைய மகள் ரசிகா (வயது22), பி.எஸ்சி. பட்டதாரி. இவர் பெருவிளை கோவிலில் சமய வகுப்பு ஆசிரியையாக உள்ளார்.

ரசிகா நேற்று முன்தினம் வெள்ளிமலை ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 2 சமய வகுப்பு மாணவிகளுடன் வந்தார். மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிமலை மேற்கு அடிவாரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் ஒரு மர்ம நபர் வந்தார். அவர் திடீரென ரசிகா மீது மோதுவது போல் சென்று, அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகா சத்தம் போட்டார்.

போலீசார் விசாரணை

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்தனர். இதற்கிடையே அந்த நபர் மின்னல் வேகத்தில் வேகமாக தப்பி சென்றார். இதுகுறித்து ரசிகா மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சமய வகுப்பு ஆசிரியையிடம் நகை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story