பஸ்சில், பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி திருட்டு


பஸ்சில், பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி திருட்டு
x

சீர்காழியில் பஸ்சில், பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி திருட்டு போனது

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது45). இவர் உறவினர்களுடன் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு சீர்காழி புதிய பஸ்நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக திருமுல்லைவாசல் அரசு பஸ்சில் நாகலட்சுமி ஏறியுள்ளார். அப்போது பஸ்சில் இருந்த கூட்டத்தை பயன்படுத்தி மர்ம நபர், நாகலட்சுமி கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி சீர்காழி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story