துக்க நிகழ்ச்சி நடந்த வீட்டில் 2½ பவுன் நகை- செல்போன் திருட்டு


துக்க நிகழ்ச்சி நடந்த வீட்டில் 2½ பவுன் நகை- செல்போன் திருட்டு
x

விராலிமலை அருகே துக்க நிகழ்ச்சி நடந்த வீட்டில் இருந்து 2½ பவுன் நகை- செல்போனை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை

விராலிமலை அருகே அம்பாள் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. தொழிலாளி. இவரது மகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது உடலை அடக்கம் செய்வதற்காக கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சுடுகாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் இறுதி சடங்கை முடித்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 2½ பவுன் நகை மற்றும் செல்போன் ஒன்றையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story