வாலிபர் கொலை வழக்கில் உறவினர்கள் 2 பேர் கைது


தென்னிலை அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குடிபோதையில் தகராறு

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள உப்புபாளையத்தை ேசர்ந்த சிவபால் (வயது 35). இவர் நேற்று முன்தினம் உப்புபாளையம் அருகே உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த வீராசாமி என்பவரது தோட்டத்தின் அருகே ெகாலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதையடுத்து சிவபால் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் கமலம் தென்னிலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில், தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், சிவபால் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்றும் சிவபால் மது அருந்தி விட்டு வந்து அதே ஊரை சேர்ந்த தனது தாய்மாமா தனபாலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தனபால், சிவபாலை கண்டித்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சிவபால் அரிவாளால் தனபாலை வெட்டினார். இதில் காயம் அடைந்த தனபால் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உறவினர்கள் 2 பேர் கைது

இதனால் ஆத்திரமடைந்த தனபாலின் மகன்களான கார்த்திகேயன் (27), பூவரசன் என்கிற புவனேஷ் (24) ஆகியோர் வீராச்சாமி என்பவரின் தோட்டத்தின் அருகே வந்து அங்கு மதுபோதையில் இருந்த சிவபாலை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் சிவபால் இறந்து விட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து, கார்த்திகேயன், புவனேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story