திருமங்கலம் அருகே மிட்டாய் திருடியதாக பள்ளிக்கூட மாணவர்கள் 2 பேரை தூணில் கட்டி வைத்து தாக்குதல் -பெட்டிக்கடைக்காரர் மீது வழக்கு
திருமங்கலம் அருகே பள்ளிக்கூட மாணவர்கள் 2 பேரை மிட்டாய் திருடியதாக தூணில் கட்டி வைத்து அடித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெட்டிக்கடைக்காரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே பள்ளிக்கூட மாணவர்கள் 2 பேரை மிட்டாய் திருடியதாக தூணில் கட்டி வைத்து அடித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பெட்டிக்கடைக்காரர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெட்டிக்கடைக்காரர்
மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 65). பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று மதியம் சந்தோஷ் மகள் வயல் வேலைக்கு சென்று விட்டார். இதனால் கடையின் பாதி கதவை மூடி வைத்து கடைக்குள்ளே சந்தோஷ் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது கடைக்கு வந்த பள்ளிக்கூட மாணவர்கள் 5 பேர் சந்தோஷ் தூங்குவதை அறிந்து கடையில் இருந்த மிட்டாய்களை திருடியதாக சொல்லப்படுகிறது.
மாணவர்களை தாக்கியதாக புகார்
அந்த சமயம் கடைக்கு வந்த சந்தோஷத்தின் மகள் கூச்சலிடவே 3 மாணவர்கள் தப்பி ஓடி விட்டனர். 2 பேரை பிடித்து மிட்டாய் திருடியதற்காக சத்தம் போட்டு உள்ளார். இந்நிலையில் கடையில் தூங்கி கொண்டிருந்த சந்தோஷ் சத்தம் கேட்டு எழுந்து வந்து மாணவர்களை விசாரித்து அவர்களை தூணில் கட்டி வைத்து அடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. வீடியோ காட்சிகளின் ஆதாரத்தை வைத்து கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தோஷ் மீது திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.