அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 2 முதியவர்கள் சாவு-யார் அவர்கள்? போலீசார் விசாரணை
அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 2 முதியவர்கள் இறந்தனர். அவர்கள் யார் ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்
சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். மாநிறத்தில் ஒல்லியான உருவத்துடன் உள்ள அவர் நீல நிற டி-சர்ட், சிவப்பு நிற டிராயர் அணிந்திருந்தார். 2 கால்களின் முட்டிப்பகுதியில் காயத்தழும்பு உள்ளன.
அதே போன்று 65 வயதான முதியவர் ஒருவரும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இறந்து கிடந்தார். சிவப்பு நிற சட்டை, நீல நிற வேட்டி அணிந்திருந்தார். இவரது இடது பக்க நெற்றி, வலது பக்க முட்டி பகுதிகளில் காயத்தழும்பு உள்ளன. இறந்த இந்த 2 முதியவர்களும் யார் என்று அடையாளம் தெரியவில்லை. சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீசார், அந்த 2 பேரின் உடல்களை மீட்டு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story