அருமனையில் 2 கடைகளில் திருட்டு
அருமனையில் 2 கடைகளில் திருட்டு நடந்தது.
கன்னியாகுமரி
அருமனை:
அருமனை சந்திப்பில் சஜின் என்பவர் உரக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பகலில் சஜின் கடையை பூட்டாமல் அருகில் உள்ள உர குடோனுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை காணவில்லை. கடைக்குள் யாரோ மர்ம நபர் புகுந்து பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இதே போல் தினசரி சந்தை அருகே ராஜேந்திரன் என்பவரின் டீக்கடையில் இருந்து ரூ.3 ஆயிரம் திருட்டு போனது.
இதுபற்றி இருவரும் அருமனை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடைகளின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story