தஞ்சையில், 2 கடைகளுக்கு 'சீல்' வைப்பு
தஞ்சையில், 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது
தஞ்சாவூர்
தஞ்சாவூர்:-
தஞ்சை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான புகார்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்தன. இதையடுத்து தஞ்சை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையில் அலுவலர்கள் தஞ்சை பூக்காரத்தெரு மற்றும் வல்லம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வல்லம் மற்றும் பூக்காரத்தெருவில் உள்ள 2 கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் இதுபோன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story