புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'


புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்
x

புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருச்சி

திருச்சி:

திருச்சி மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திருச்சி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள அனீஸ் கேண்டின் கடை மற்றும் காந்தி மார்க்கெட்டில் பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 2 கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அந்த கடைகளில் நடந்த சோதனையில், தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 'சீல்' வைத்தனர்.


Next Story