போதை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'


போதை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு சீல்
x

குடியாத்தத்தில் போதை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

வேலூர்

குடியாத்தம் டவுன் தரணம்பேட்டை பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, ஹான்ஸ் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் குடியாத்தம் டவுன் போலீசார் நேற்று மாலையில் திடீரென தரணம்பேட்டை பஜாரில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் இருந்தது. அதைத்தொடர்ந்து அங்கிருந்த சுமார் 12 கிலோ குட்கா மற்றும் ஹான்ஸை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சகாதேவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் விற்பனை செய்ததாக இரண்டு கடைகளுக்கு உதவி கலெக்டர் வெங்கட்ராமன் முன்னிலையில், குடியாத்தம் டவுன் போலீசார் சீல் வைத்தனர். கடைகளுக்கு சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story