2 கடைகள் தீப்பிடித்து எரிந்தது


2 கடைகள் தீப்பிடித்து எரிந்தது
x

கபிஸ்தலத்தில் 2 கடைகள் தீப்பிடித்து எரிந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

கபிஸ்தலத்தில் 2 கடைகள் தீப்பிடித்து எரிந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

கடைகள் தீப்பிடித்து எரிந்தது

கபிஸ்தலம் மெயின் ரோட்டில் வசிப்பவர் முத்து (வயது42). அந்த பகுதியில் இவருக்கு சொந்தமான இரண்டு கடைகள் உள்ளன. ஒரு கடையில் மேல கபிஸ்தலத்தை சேர்ந்த சூசைமணி மகன் வின்சென்ட் என்பவர் டி.வி. மெக்கானிக் கடையும், மற்றொரு கடையில் கபிஸ்தலத்தை சேர்ந்த சண்முகம் மகன் ரமேஷ் என்பவர் பெட்டிக்கடையும் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென 2 கடைகளும் தீப்பிடித்தது. பின்னர் கடைகள் கொழுந்து விட்டு எரிந்தது. இதைபார்த்த அக்கம், பக்கத்தினர் பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்

அதன்பேரில் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அன்புச்செல்வன், ஜனார்த்தனன், அலெக்ஸ் பாண்டியன், பிரபாகரன், ராம்குமார், ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

இருப்பினும் 2 கடைகளும் எரிந்து நாசம் அடைந்தன. இந்த கடைகளில் இருந்த டி.வி., குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

போலீசார் விசாரணை

இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதா? அல்லது யாராவது தீ வைத்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story