இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது


இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Sept 2023 12:15 AM IST (Updated: 16 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள் 2 பேரை நாகை கடலோர காவல் குழும போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள் 2 பேரை நாகை கடலோர காவல் குழும போலீசார் கைது செய்தனர்.

இலங்கை மீனவர்கள்

இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் நிக்சன்டிலக்ஸ்(வயது 38), சுபத்ரன்(36). இவர்கள் இருவரும் படகில் மீன்பிடித்தபோது அவர்களது படகு பழுதாகி நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் நின்றது.

கடந்த 4 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்கள் இருவரும் நேற்று காலை கோடியக்கரை அருகே சிறுதலைக்காடு கடற்கரையில் படகுடன் கரை சேர்ந்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் கடற்கரையோரம் நடந்தே கோடியக்கரை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் மற்றும் போலீசார், இலங்கையை சேர்ந்த மீனவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் வந்த படகு உண்மையிலேயே பழுதாகி உள்ளதா? என்பதையும் சோதனை செய்தனர். மேலும் அவர்களிடம் கியூ பிராஞ்ச் போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசாரும் விசாரணை நடத்தினர்.

கைது

இதையடுத்து எல்லை தாண்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இலங்கை மீனவர்கள் இருவரையும் கைது செய்து சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.


Related Tags :
Next Story