2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்


2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்
x

2 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் நேற்று நடக்க இருந்த 17 வயது சிறுமிகள் 2 பேரின் திருமணத்தை, கலெக்டர் உத்தரவின் பேரில் சமூக நலத்துறை அலுவலர்கள், போலீசார் தடுத்து நிறுத்தி சிறுமிகளை மீட்டனர்.

17 வயது சிறுமி

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கரூர் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த 22 வயது கூலி தொழிலாளிக்கும் தஞ்சையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை 7.30 மணிக்கு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி சமூக நல அலுவலக ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா, சைல்டு லைன் குழு உறுப்பினர் இளமதி, தஞ்சை தெற்கு போலீசார் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு சென்று, திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைப்பு

இதே போல பாபநாசம் பகுதியில், 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த சட்டம் படித்து வரும் 22 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, வாலிபரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்களை சமதானம் செய்து, நேற்று காலை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்து இருந்தனர். இது குறித்து மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா, வழக்கு பணியாளர் பிரபா இருவரும் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூர்ணிமா, இன்ஸ்பெக்டர் வனிதா உதவியுடன் சம்பவ இடத்துக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

பின்னர், 2 சிறுமிகளையும் ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு அழைத்து சென்ற அலுவலர்கள், குழந்தைகள் திருமணம் குறித்து கவுன்சிலிங் வழங்கி, குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தனர்.


Next Story