2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது


2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது
x

சிறுமியை கிண்டல் செய்த 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

திருநெல்வேலி

மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் அப்பாஸ் (வயது 30), இறைச்சி கடை ஊழியர் முஸ்தபா (33) ஆகியோர் சிறுமியை கிண்டல் செய்துள்ளனர். இதை சிறுமி தட்டி கேட்டதும் அவர்கள் 2 பேரும் சிறுமியிடம் தகராறு செய்துள்ளனர்.

இதுகுறித்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் அப்பாஸ், முஸ்தபா ஆகியோரை கைது செய்தனர்.


Next Story