விஷம் குடித்து 2 வாலிபர்கள் தற்கொலை


விஷம் குடித்து 2 வாலிபர்கள் தற்கொலை
x

வலங்கைமான் அருகே வெவ்வேறு இடங்களில்விஷம் குடித்து 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

திருவாரூர்

வலங்கைமான்:

வலங்கைமான் அருகே வெவ்வேறு இடங்களில் விஷம் குடித்து 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷம் குடித்து தற்கொலை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கொட்டையூர் பகுதியை சேர்ந்த தனபால் மகன் கார்த்தி (வயது32). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி கோபித்து கொண்டு அவரது தந்தை வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கார்த்தி நேற்று எலி மருந்தை(விஷம்) குடித்து விட்டு மயங்கி விழுந்தார்.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல வலங்கைமானை அடுத்த சாரநத்தம் ஊராட்சி வேடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (32). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சம்பவத்தன்று அவரது தாயார் டி.வி. பார்த்துக் கொண்டு அவருக்கு உணவு வழங்க தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் தாய்-மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக மனவேதனை அடைந்த மணிகண்டன் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story