வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலி
ராமநாதபுரம் அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 2 வாலிபர்கள் பலியாகினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்துகளில் 2 வாலிபர்கள் பலியாகினர்.
விபத்து
ராமநாதபுரம் அருகே உள்ள தியாகவன்சேரி பகுதியை சேர்ந்த பூமிநாதன் மகன் விஜயகுமார் (வயது18). இவர் நேற்று அதிகாலை ராமநாதபுரம் வந்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தோழியை அழைத்து கொண்டு விஜயகுமார் ஊருக்கு சென்றார். காவனூர் தெற்கு பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற மாட்டுவண்டியின் மீது மோட்டார் சைக்கிள் மோதி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.
இதில் விஜயகுமார் மற்றும் அவரது தோழி படுகாயமடைந்தனர். விஜயகுமாரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இறந்த வாலிபர் விஜயகுமாரின் கண் தானம் செய்யப்பட்டது.
மற்ெறாரு சம்பவம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள மொட்டையன்வலசையை சேர்ந்த காயாம்பு மகன் முனீஸ்வரன் (24). இவர் வண்ணாங்குண்டு பகுதியில் தேங்காய் நார் உறிக்கும் இடத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வண்ணாங்குண்டு குச்சிளி மடம் முனீஸ்வரர் கோவில் அருகில் வந்தபோது ராமேசுவரம் நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் மீது முனீஸ்வரனின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் முனீஸ்வரன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து முனீஸ்வரனின் தாய் லெட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குபதிவு செய்து வேன் டிரைவர் ராஜஸ்தான் லால்காட் மாவட்டம் காலூராம் மீனா (50) என்பவரை கைது சேய்து விசாரித்து வருகிறார்.