வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது


வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது
x

வேதாரண்யத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகை, அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்;

வேதாரண்யத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகை, அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

40 பவுன் நகை திருட்டு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறை சிவன் வடக்கு வீதியை சேர்ந்த சாகுல்அமீது, ஜின்னா, தேத்தாகுடி பகுதியை சேர்ந்த முருகானந்தம், நீர்மூளையை சேர்ந்த கலைமணி ஆகியோரின் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டை உடைத்து40 பவுன் நகை மற்றும் வெளிநாட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை- பணத்தை திருடி சென்ற மா்ம நபர்களை தேடி வந்தனர்.

20 பவுன் நகை

இந்தநிலையில் தோப்புத்துறை சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் அந்த காரில் 20 பவுன் நகை மற்றும் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரில் இருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ராமஜெயம்(வயது35) மற்றும் திருவாரூரை சேர்ந்த குருசக்தி(34) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில் அவர்கள் கடந்த ஓரு ஆண்டாக வேதாரண்யம் பகுதியில் நடந்த திருட்டில் சம்பந்தப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராமஜெயம், குருசக்தி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் நகை மற்றும் அமெரிக்க டாலர்கள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story