சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்


சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்
x

சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை

அரிமளம்:

ரேஷன் அரிசி கடத்தல்

புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் அரிமளம் அருகே கீழாநிலைகோட்டை வம்பரம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து சோதனையிட்டனர்.

அப்போது, அந்த சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் அதனை கல்லூரை சேர்ந்த சோமசுந்தரம் (வயது 58) கடத்தி வந்தது தெரிந்தது.

பறிமுதல்

இதையடுத்து சரக்கு வேனுடன் சுமார் 2 ஆயிரத்து 150 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சோமசுந்தரத்தை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story