சரக்கு ஆட்டோவில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


சரக்கு ஆட்டோவில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 27 Feb 2023 6:16 PM IST (Updated: 27 Feb 2023 10:27 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் சரக்கு ஆட்டோவில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை

வடக்கு மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு கீதா உத்தரவின்பேரில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் மேற்பார்வையில், ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டுகள் சந்திரன், அருள் ஆகியோர் ரேஷன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ராணிப்பேட்டை - சித்தூர் ரோடு காரை கூட்ரோடு அருகில் நேற்று முன்தினம் வாகன தணிக்கை செய்தனர். அப்போது வந்த ஒரு சரக்கு ஆட்டோவை மறித்து, சோதனை செய்ததில், தலா 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது.

விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் ஆற்காடு வேல்முருகேசன் தெருவை சேர்ந்த மருதுபாண்டியன் (வயது 34) என்பதும், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு சென்று கள்ளச் சந்தையில் விற்று வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகளைபறிமுதல் செய்து வாலாஜா நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, மருது பாண்டியனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.


Next Story