சரக்கு வேனில் கடத்திய 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ரேஷன் அரிசி கடத்தல்
திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில், தஞ்சாவூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில், புதுகோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் சூரக்காடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து சோதனை நடத்தினர். அப்போது வேனில் 2 ஆயிரத்து 300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதைத்தொடர்ந்து சரக்கு வேனை ஓட்டிவந்த மழையூரை சேர்ந்த கோவிந்தசாமி (வயது 44) என்பவரை போலீசார் கைது செய்து, சரக்கு வேன், ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கைதுசெய்யப்பட்ட கோவிந்தசாமியை போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.