வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சிவகாசி அருகே வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே வேனில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாகன தணிக்கை
சிவகாசி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள இரட்டைப்பாலம் அருகில் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது அந்த வழியாக வந்த சரக்கு வேனை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த சரக்கு வேனில் 46 பாலித்தீன் பைகளில் 2,300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தையும், ரேஷன் அரிசிகளையும் பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
அந்த வாகனத்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 24), கொம்பையா (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர். சரக்கு வாகனத்தில் வந்த நெல்லை மாவட்டம் தாழையூத்தை சேர்ந்த முத்து என்கிற பேச்சிமுத்துவை தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.