கிராவல் மண் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்


கிராவல் மண் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 March 2023 12:29 AM IST (Updated: 11 March 2023 3:36 PM IST)
t-max-icont-min-icon

கிராவல் மண் கடத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இலையூர் வாரியங்காவல் பகுதியில் டிராக்டரில் கிராவல் மண் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அப்பகுதியில் ஜெயங்கொண்டம் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் குருநாதனுடன் சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிராக்டர்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், அந்த டிராக்டர்களில் அனுமதிச்சீட்டு இல்லாமல் கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதற்கிடையே அந்த டிராக்டர்களை ஓட்டி வந்தவர்கள், அவற்றை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் இலையூர் கண்டியாங்கொல்லை கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் நவமணி, சாமிக்கண்ணு மகன் வீரமணி என்பது தெரியவந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் குருநாதன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டர்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story