கிராவல் மண் ஏற்றி சென்ற 2 லாரி டிரைவர்கள் கைது


கிராவல் மண் ஏற்றி சென்ற 2 லாரி டிரைவர்கள் கைது
x

திருமயம் அருகே கிராவல் மண் ஏற்றி சென்ற 2 லாரி டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

திருமயம் தாலுகாவில் கிராவல் மண் லாரிகளில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, பொன்னமராவதி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் ரகுமான் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குணசேகரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் காரைக்குடி சாலையில் சபரியாபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற 2 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆதனூரில் இருந்து குளவாய்பட்டிக்கு கிராவல் மண் அனுமதியின்றி ஏற்றி சென்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்த போலீசார் டிரைவர்களான கே.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 60), கோவிலூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (35) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story