கூழாங்கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்


கூழாங்கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
x

கூழாங்கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையிலான போலீசார் எழுநாச்சிபுரம் காட்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே ஒன்றன்பின் ஒன்றாக வந்த 2 மினி லாரிகளை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் சுமார் ஒன்றரை யூனிட் அளவிலான கூழாங்கற்கள்அரசு அனுமதி இன்றி கடத்திவரப்பட்டது தெரிய வந்தது. பின்னர் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து லாரியை ஓட்டி வந்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த அசோக்ராஜ் மகன் அரவிந்த்(வயது 21), கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் மகன் திருமுருகன்(30) ஆகிய இருவரையும் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story