தக்கலையில் அதிக பாரம் ஏற்றிய 2 லாரிகளுக்கு அபராதம்

தக்கலையில் அதிக பாரம் ஏற்றிய 2 லாரிகளுக்கு  அபராதம்
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தக்கலையில் அதிக பாரம் ஏற்றிய 2 லாரிகளுக்கு அபராதம்

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலையில் அதிக பாரம் ஏற்றிய 2 லாரிகளுக்கு அபராதம்

குமரி மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் பாறைக்கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி செல்லும் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து அபராதமும் விதித்து வருகின்றனர். இந்தநிலையில், தக்கலை பழைய பஸ் நிலையம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை தக்கலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அந்த லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான மணல் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த 2 லாரிகளுக்கும் ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Next Story