குளத்தில் கவிழ்ந்த 2 லாரிகள்


குளத்தில் கவிழ்ந்த 2 லாரிகள்
x

கடையநல்லூரில் குளத்தில் 2 லாாிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தென்காசி

அச்சன்புதூர்:

கடையநல்லூர் தேசிய நெடுஞ்சாலை அருகே அட்டைகுளம் உள்ளது. ராஜபாளையத்தில் இருந்து நேற்று சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, ஒரு லாரி கேரளாவுக்கு புறப்பட்டது. கடையநல்லூர் அருகே சென்ற போது, ஒரு வேனில் போலீஸ்காரர்கள் 10-க்கும் மேற்பட்டவர்கள் வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக சிமெண்டு மூட்டை ஏற்றி வந்த லாரி போலீஸ்காரர்கள் வந்த வேனின் மீது லேசாக மோதி, சாலையோரத்தில் நின்ற மற்றொரு சிமெண்டு லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் குளத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு, பாரம் தாங்காமல் 2 லாரிகளும் குளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை.


Next Story