மாணவனிடம் பேசிக்கொண்டிருந்த பிளஸ்-1 மாணவியிடம் அத்துமீறிய 2 பேர் கைது
ஆழ்வார்குறிச்சியில் மாணவனிடம் பேசிக்கொண்டிருந்த பிளஸ்-1 மாணவியிடம் அத்துமீறிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஒரு கட்டிடத்தின் பின்புறம் பிளஸ்-2 மாணவர் ஒருவரும், பிளஸ்-1 மாணவி ஒருவரும் தனியாக நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆழ்வார்குறிச்சி திருநீலகண்ட விநாயகர் கோவில் தெருவைச்சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சுடலைமுத்து (வயது 23), அதே தெருவைச்சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் துர்க்கைசிவசக்தி (20) ஆகியோர் மாணவ-மாணவி இருவரையும் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். பின்னர் இருவரையும் மிரட்டினர்.
திடீரென மாணவியிடம் இருவரும் அத்துமீறி உள்ளனர். இதை பார்த்ததும் அந்த மாணவர் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு ஓடிச்சென்று விவரத்தை கூறியுள்ளார்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அத்துமீறலில் ஈடுபட்ட சுடலைமுத்து, துர்க்கைசிவசக்தி ஆகிய இருவரையும் பிடித்து வந்தனர். பின்னர் அந்த மாணவியின் புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.