டிப்-டாப் உடையில் நகை திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது


டிப்-டாப் உடையில் நகை திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது
x

பயணிகளிடம் டிப்-டாப் உடையில் நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

நகை பறிப்பு

வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பெண்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

இதனிடையே வேலூரை சேர்ந்த கலைவாணி (வயது 68) என்பவர் புதிய பஸ் நிலையம் வந்திருந்தபோது அவரது கைப்பையில் இருந்த 3 பவுன் நகை திருடப்பட்டதாக வடக்கு போலீசில் புகார் செய்தார். அதில் சந்தேகப்படும்படியாக 2 பெண்கள் தனது அருகில் நின்றதாகவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 பெண்களையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

2 பெண்கள் கைது

விசாரணையில் அவர்கள் பழனியை சேர்ந்த காயத்திரி (32), ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த நந்தினி (29) என்பதும், கலைவாணியிடம் நகை பறித்ததும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் டிப்-டாப் உடையில் பஸ்சில் பயணம் செய்யும் பெண்களிடம் பயணிகள் போன்று நடித்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.


Next Story