கடையில் ஜவுளிகளை திருடிய 2 பெண்கள் கைது


கடையில் ஜவுளிகளை திருடிய 2 பெண்கள் கைது
x

கடையில் ஜவுளிகளை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரும், இவரது நண்பரும் சேர்ந்து ஜெயங்கொண்டத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகின்றனர். கடையில் அவரது மனைவி மேனகா மற்றும் பணியாளர்கள் ஜவுளி விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 5 பேர் சேர்ந்து வந்து துணிகளை பார்த்துவிட்டு ஒரே ஒரு சேலை மட்டும் வாங்கிச் சென்றனர். பின்னர் கடை பணியாளர்கள் துணிகளை எடுத்து அடுக்கியபோது சில ஜவுளிகளை காணவில்லை. இதையடுத்து உரிமையாளர் கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தபோது, அதில் சிலர் சேர்ந்து ஜவுளிகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் மேனகா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து கல்லாத்தூர் தண்டலை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனின் மனைவி அஞ்சம்மாள்(35), ரமேசின் மனைவி கல்பனா(40) ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


Next Story