தீயில் இருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள 10 அடி உயரத்தில் இருந்து குதித்த 2 தொழிலாளிகள் தனியார் அனல் மின்நிலையத்தில் பரபரப்பு
தனியார் அனல் மின்நிலையத்தில் தீயில் இருந்து உயிரை காப்பாற்றிக்கொள்ள 10 அடி உயரத்தில் இருந்து குதித்த 2 தொழிலாளிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்
கம்மாபுரம்,
நெய்வேலி அருகே உள்ள ஊத்தங்காலில் தனியார் அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு நிலக்கரி எரிக்கும் பகுதியில் நேற்று மாலை திடீரென தீ அதிமாக எரிந்தது. இதனால் தீ சுவாலை அதிமாக மேல் நோக்கி சென்றது. அந்த சமயத்தில், அப்பகுதியில் 10 அடி உயரத்தில் வேலையில் ஈடுபட்டிருந்த நிரந்தர தொழிலாளி சதீஷ் (வயது 24), ஒப்பந்த தொழிலாளி கோவிந்தசாமி மகன் ராஜீவ்காந்தி (38) ஆகியோர், தங்கள் மீது தீப்பற்றி விடுமோ என்கிற அச்சத்தில், தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக கீழே குதித்தனர். இதில் அவர்கள் 2 பேரும் காயமடைந்தனர். இதையடுத்து சிகிச்சைக்காக அவர்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story