கார் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலி


கார் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலி
x

கார் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலி

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே கார் மோதி விவசாய கூலித் தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

கார் மோதியது

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் கிராமம் ஜீவா காலனியை சேர்ந்தவர் நடேசன்(வயது 65) அதே ஊர் காமராஜர் காலனியில் வசித்தவர் முத்துசாமி(63). இருவரும் விவசாய கூலி தொழிலாளர்கள்.

நேற்று அதிகாலை அந்த பகுதியில் ரோட்டோரம் உள்ள கூட்டுறவு சங்கம் அருகில் நடேசன், முத்துசாமி மற்றும் பால் வியாபாரம் செய்து வரும் சாமிக்கண்ணு ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து தஞ்சாவூர் வழியாக பட்டுக்கோட்டை நோக்கி வந்த கார் அவர்கள் மீது மோதியது.

2 பேர் பலி

இதில் நடேசன், முத்துசாமி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பால் வியாபாரி சாமிக்கண்ணு அருகில் உள்ள பள்ளத்தில் குதித்து உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான நடேசன், முத்துசாமி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story