2 பேருக்கு ஓராண்டு சிறை


2 பேருக்கு ஓராண்டு சிறை
x
திருப்பூர்


திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் ரவிக்குமார் (வயது 22), சுபாஷ் சந்திர போஸ் (26). இவர்கள் மீது திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதன்பேரில் வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர், திருப்பூர் தெற்கு போலீஸ் துணை கமிஷனர் மூலமாக 2 பேருக்கும் ஒரு வருடத்துக்கு நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டது.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி, கல்லாங்காடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 2 பேரை ரவிக்குமார், சுபாஷ் சந்திரபோஸ் சேர்ந்து கத்தியால் வெட்டி இருசக்கர வாகனத்தை பறித்து சென்றனர். இதற்காக அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிணைய பத்திரத்தின் உத்தரவை மீறிய குற்றத்துக்காக திருப்பூர் தெற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் வனிதா, 2 பேரையும் ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 2 பேரும் திருப்பூர் மாவட்ட சிறையில் இருந்து மாற்றம் செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story