விபத்தில் டெய்லர் பலியான வழக்கில்லாரி டிரைவருக்கு 2 ஆண்டு சிறைகோபி கோர்ட்டு தீர்ப்பு
விபத்தில் டெய்லர் பலியான வழக்கில்லாரி டிரைவருக்கு 2 ஆண்டு சிறை விதித்து கோபி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
கோபி அருகே உள்ள அவ்வையார்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 50). டெய்லர். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ந் தேதி அன்று கோபியில் இருந்து குன்னத்தூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செட்டியாம்பாளையம் பிரிவில் சென்றபோது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக முத்துசாமியின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்துசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தியூர் பிரம்மதேசத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான ஈஸ்வரன் (28) என்பவரை கைது செய்தனர். பின்னர் கோபி முதலாவது வகுப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த மாஜிஸ்திரேட்டு விஜய் அழகிரி, லாரி டிரைவர் ஈஸ்வரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.