கட்டிட தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை


கட்டிட தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை
x

விவசாயியை கத்தியால் வெட்டி மிரட்டல் கட்டிட தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு

கடலூர்

கடலூர்

நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கத்தை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் அருள் (வயது 42). விவசாயி. இவர் கடந்த 21.1.2017 அன்று மனைவி செந்தாமரையுடன் வீட்டுக்கு அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த உறவினர் சுப்பிரமணியன் மகன் பிரகாஷ் (29) என்பவர் குடித்துவிட்டு சத்தம் போட்டார்.

இதை பார்த்த அருள் அவரை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், அருளை கரும்பு வெட்டும் கத்தியால் தாக்கினார். இதில் காயமடைந்த அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மீண்டும் வந்து அவரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது பற்றி செந்தாமரை நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி வனஜா தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் பிரகாஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கவுதமன் ஆஜரானார்.


Next Story