மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி: வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான வழக்கில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம்
சேலம் வீராணம் அருகே உள்ள பருத்திக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 56). விவசாயி. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி அயோத்தியாப்பட்டணம் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூர் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்த பொற்செல்வம் (24) அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக முத்துசாமி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பலியானார்.
இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொற்செல்வத்தை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி பொற்செல்வத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாஜிஸ்திரேட்டு யுவராஜ் தீர்ப்பு அளித்தார்.
Related Tags :
Next Story