விவசாயி வீட்டில் திருட முயன்ற வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை-ஆலங்குடி கோர்ட்டு தீர்ப்பு


விவசாயி வீட்டில் திருட முயன்ற வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை-ஆலங்குடி கோர்ட்டு தீர்ப்பு
x

விவசாயி வீட்டில் திருட முயன்ற வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஆலங்குடி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலத்தை சேர்ந்தவர் மத்தியாஸ், விவசாயி. இவரது வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற சுந்தரநாயகிபுரத்தை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பவரை கடந்த 2015-ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஆலங்குடி குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி விஜய்பாரதி, விவசாயி வீட்டில் திருட முயன்ற செல்வத்திற்கு ஐ.பி.சி. 454-ன்படி ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், ஐ.பி.சி. 380-ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.


Next Story