தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது


தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது
x

தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

ஆவூர்:

விராலிமலை ஒன்றியம், மண்டையூர் திருமயத்தான்காடு பகுதியை சேர்ந்த சங்கிலிமுத்துவின் மகன் முருகேசன்(வயது 29). இவர் மண்டையூர் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகேசன் நேற்று முன்தினம் இரவு நேர பணிக்காக தொழிற்சாலை முன்பு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த செப்பிளாந்தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் கார்த்தி(22), சக்திவேலின் மகன் செல்வம்(22) மற்றும் அதே ஊரைச்சேர்ந்த ஜீவா ஆகிய மூன்று பேரும் முருகேசனிடம் தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து 3 பேரும் சேர்ந்து முருகேசனை தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, செல்வம் ஆகியோரை நேற்று கைது செய்தார். பின்னர் அவர்களை கீரனூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார். மேலும் தப்பியோடிய ஜீவாவை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story