சாமி சிலைகளை உடைத்த 2 வாலிபர்கள் கைது
அய்யனாரப்பன் கோவில் சாமி சிலைகளை உடைத்த 2 வாலிபர்கள் கைது
விழுப்புரம்
விழுப்புரம் விராட்டிக்குப்பம் ஏரிக்கரைமேட்டில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அய்யனாரப்பன் சாமி சிலையின் வலது கை மற்றும் அங்கிருந்த குதிரை சிலை, காவலர் சிலை, கன்னிமார் சிலை, குடிநீர் குழாய் ஆகியவற்றை நேற்று முன்தினம் மாலை யாரோ சிலர் உடைத்து சேதப்படுத்தியிருந்தனர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விழுப்புரம் விராட்டிக்குப்பம் ஸ்டாலின் நகர் பகுதியை சேர்ந்த சந்துரு (வயது 19), கார்த்திகேயன் (19), பிரேம் (23) ஆகிய 3 பேரும் விராட்டிக்குப்பம் அய்யனாரப்பன் கோவில் அருகில் இறந்து கிடந்த அணிலை அருகில் உள்ள தண்ணீர் குழாயில் அலசியதும், அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (42) என்ற விவசாயி அவர்கள் 3 பேரையும் தட்டிக்கேட்டபோது அவரை 3 பேரும் சேர்ந்து அவரை திட்டியதோடு மேற்கண்ட கோவில் சிலைகள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து சந்துரு உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துரு, கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.