கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது


கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
x

கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேண்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் சேண்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 22), சியாம்திவாகர் (25) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story