கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
சேத்தியாத்தோப்பில் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
கடலூர்
சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் உத்தரவின் பேரில் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கட்டுக்கரை ஏ.டி.எஸ்.மதகு அருகே சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஏழுமலை(வயது 32) என்பது தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் குமாரகுடி ஆட்டோ நிறுத்தம் அருகே கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த ரவி மகன் வல்லரசு(23) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story