கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது
குலசேகரம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக குலசேகரம் போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பல்வேறு இடங்களில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் குலசேகரம் அருகே மாமூடு இரட்டைகுளம் அருகே அனிஷ் என்ற ஜெகன் (வயது 33) என்பவர் கஞ்சாவை மறைத்து வைத்து இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் மாலையில் அனிசை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் கஞ்சா 50 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து அனிசை போலீசார் கைது செய்தனர். மேலுர், அவர் கஞ்சாவை எங்கிருந்து மொத்தமாக வாங்கினார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அனிசுக்கு கஞ்சா பொட்டலங்களை கொடுத்தது குலசேகரம் அருகே கூடைத்தூக்கி பகுதியை சேர்ந்த தனுஷ்(25) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.