ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓமலூர்:-
ஓமலூரை அடுத்த நடுப்பட்டி ஊராட்சியில் கடந்த ஒரு மாத காலமாக ஜெகநாதன், அறிவழகன், ராமன் உள்பட 7-க்கும் மேற்பட்டவர்களின் ஆடுகள் திருட்டு போனது. இந்த நிலையில் நேற்று அதிகாலை நடுப்பட்டி கொல்லர்தெரு காட்டுவளவு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான ஆட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பின்னர் அவர் சந்தேகத்தின் பேரில் உம்பிளிக்கம்பட்டி பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு திருட்டு போன ஆடு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து புருஷோத்தமன் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஆடு திருடியதாக உம்பிளிக்கம்பட்டி மேலூர் காடு பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 25), சந்தைப்பேட்டை சாவடி பகுதியை சேர்ந்த தீபக்ராஜ் (24) ஆகிய 2 ேபரை கைது செய்தனர். மேலும் ஆடு திருட பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.