ஆடுகள் திருடிய 2 வாலிபர்கள் கைது
ஆடுகள் திருடிய 2 வாலிபர்கள் கைது
தஞ்சாவூர்
தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் அற்புதராஜ்(வயது 61). கூலித் தொழிலாளி. இவருக்கு சொந்தமான 3 ஆடுகளை வீட்டின் அருகே கட்டி போட்டிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது ஆடுகளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் ஆடுகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் அற்புதராஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன்(25), பிரவீன்குமார்(20) ஆகியோர் ஆடுகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story