பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது


பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
x

பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி சத்யாதேவி (வயது 35).

இவர் கடந்த 3-ந் தேதி காய்கறி வாங்குவதற்காக ஆலங்குடி வாரச்சந்தைக்கு சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வடகாடுமுக்கம் என்னும் இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சத்யாதேவி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து சத்யாதேவி அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பட்டுக்கோட்டை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் மனோஜ்குமார் (21), சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பழையூர் வெள்ளாளர் தெருவைச்சேர்ந்த செல்வராஜ் மகன் அதியமான் (24) ஆகிேயார் சங்கிலி திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story