கோவில் உண்டியலை உடைக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது


கோவில் உண்டியலை உடைக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
x

கோவில் உண்டியலை உடைக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது 30). இவர் நேற்று முன்தினம் மாலை சாமி கும்பிடுவதற்காக ஊருக்கு அருகே உள்ள மருதையான் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கோவிலுக்கு உட்புறமாக இருந்த கோவில் உண்டியலின் பூட்டை உடைப்பதற்கு 2 நபர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தை ராஜ்குமார் கண்டார். பின்பு இருவரையும் மடக்கி பிடிப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும் கோவிலுக்கு பின்புறம் நிறுத்தி வைத்திருந்த மொபட்டில் தப்பிச்சென்றனர். இதனைக் கண்ட ராஜ்குமார் உடனே தனது மொபட்டில் அங்கு நின்று கொண்டு இருந்த விக்னேஸ்வரன் என்பவரை அழைத்துக் கொண்டு தப்பிச்சென்ற இருவரையும் பிடிப்பதற்காக துரத்தி சென்றனர். விளாங்குடி அருகே திருட முயற்சி செய்த இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்பு இருவரையும் விக்கிரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களை போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் நெரிஞ்சிக்கோரை கிராமம் காலனி தெருவை சேர்ந்த வீரமணி(32), சிலம்பரசன்(30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தார்.


Next Story