கஞ்சா வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கஞ்சா வழக்கில் கைது
தூத்துக்குடி அண்ணாநகர் சந்திப்பில் வைத்து கஞ்சா விற்பனை செய்ததாக, அண்ணா நகரை சேர்ந்த கணேசன் மகன் பிரபு வினோத்குமார் (வயது 25), முகதூம் முகமது மகன் மேத்தாபிள்ளை மரைக்காயர் (25) உள்ளிட்ட 3 பேரை தென்பாகம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயலில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில், பிரபு வினோத்குமார், மேத்தபிள்ளை மரைக்காயர் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பிரபு வினோத்குமார், மேத்தாபிள்ளை மரைக்காயர் ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார்.
அந்த உத்தரவு நகலை தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார். நடப்பு ஆண்டில் இதுவரை இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 36 பேர் உட்பட 155 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.