சாணார்பட்டி அருகே குடிசைக்கு தீவைத்த 2 வாலிபர்கள் கைது


சாணார்பட்டி அருகே குடிசைக்கு தீவைத்த 2 வாலிபர்கள் கைது
x

சாணார்பட்டி அருகே குடிசைக்கு தீவைத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகேயுள்ள கொசவபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பெனடிக் (வயது 60). தனியார் பஸ் டிரைவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கவிபாரதி (21), ஜோசப் (22). பெனடிக்கும், அவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கவிபாரதி, ஜோசப் ஆகிய இருவரும் பெனடிக்கின் குடிசைக்கு தீ வைத்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்குள் இருந்த பெனடிக் வௌியே ஓடி வந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வீட்டில் இருந்த கிரைண்டர் உள்பட பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ்நிலையத்தில் பெனடிக் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிபாரதி, ஜோசப் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story