2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

பாளையங்கோட்டை, பணகுடியில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி என்ற ஆறுமுகப்பாண்டி (வயது 33). பணகுடி அண்ணாநகரை சேர்ந்தவர் முனியசாமி என்ற மூர்த்தி (27). இவர்கள் இருவரும் சிவந்திப்பட்டி மற்றும் பணகுடி போலீஸ் நிலைய பகுதிகளில் நடந்த கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர்கள் அன்புபிரகாஷ், அஜிகுமார் ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று ஆறுமுகப்பாண்டி, மூர்த்தி ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர்கள் அன்பு பிரகாஷ், அஜிகுமார் ஆகியோர் நேற்று வழங்கினர்.


Next Story