2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லை மாவட்டத்தில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கொலை முயற்சி வழக்கு

நெல்லை அருகே உள்ள அரியகுளம் சுந்தரவள்ளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இசக்கி. இவரின் மகன் சுந்தர் (வயது 23). இவர் மீது அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா (பொறுப்பு) ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதனை மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஏற்று சுந்தரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட்டார்.

குண்டர் சட்டம்

அதே போல் முக்கூடல் பகுதியை சேர்ந்த பூத்துரை மகன் ஜோஸ்குமார் (22) என்பவர் மீது திருட்டு, அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், முக்கூடல் இன்ஸ்பெக்டர் கோகிலா ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். மாவட்ட கலெக்டர் விஷ்ணு அதனை ஏற்று ஜோஸ்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

அதன்பின்னர் இவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணைகளை இன்ஸ்பெக்டர்கள் ராதா (தாலுகா), கோகிலா (முக்கூடல்) ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.


Next Story