20-ந்தேதி மின் நிறுத்தம்


20-ந்தேதி மின் நிறுத்தம்
x

நன்னிலம், நீலக்குடி பகுதிகளில் வருகிற 20-ந்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருவாரூர்

நன்னிலம்:

நன்னிலம், நீலக்குடி பகுதிகளில் 20-ந்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நன்னிலம்

திருவாரூர் மின்கழக இயக்குதலும் பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் பிரபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நன்னிலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு 20-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்லமாங்குடி, வடக்குடி, கம்மங்குடி, குலக்கொடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தங்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசாகருப்பூர், மூலமங்கலம், ஆண்டிபந்தல், குவளைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்காகோட்டூர், ஆனைக்குப்பம், மாப்பிள்ளை குப்பம், சலிப்பேரி, தட்டாத்தி மூளை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாக்குடி, வீதிவிடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர் ஆகிய பகுதிகளுக்கு 20-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீலக்குடி

இதேபோல நீலக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாரமரிப்பு பணி வருகிற 20-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நீலக்குடி, வைப்பூர், நடப்பூர், வாழ்குடி, கீழதஞ்சாவூர், பில்லாளி, செல்வபுரம், மூலங்குடி, பழையவலம், திருவாதிரைமங்கலம், காரையூர், திருப்பள்ளி முக்கூடல், ராராத்திமங்கலம், சுரக்குடி, கங்களாஞ்சேரி, வண்டாம்பாளையம், சேந்தமங்கலம், பெரும்புகளூர், திருப்பைத்தங்குடி, மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்கழக இயக்குதலும் பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story